ருத்தடை சாதனங்களுக்கான விளம்பரம் என்ற பெயரில் டி.வி.க்கள் ஆபாச படங்களை ஒளிபரப்புகின்றன என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இதனை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், அநேகமாக எல்லா டி.வி. சேனல்களும் , இரவு 10 மணிக்கு மேல்,கருத்தடை சாதன விளம்பரம் எனக்கூறிக்கொண்டு, அருவருக்கத்தக்க காட்சிகளை ஒளிபரப்பவதாக குறிப்பிட்டனர்.
’’இந்த விளம்பரங்கள், இதனை பார்க்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதை பாதிக்கும்’’ என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,இது போன்ற விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தனர்.
‘’விளம்பரம் என்று கூறிக்கொண்டு நிர்வாண காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக குறிப்பிட்ட நீதிமன்றம், இது, கேபிள் ஒளிபரப்பு நெட்ஒர்க் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என கருத்து தெரிவித்தது.
‘’இது போன்ற காட்சிகளை ஒளிபரப்பும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மத்திய- மாநில அரசுகளுக்கு உயர்நீதி,மன்றம் உத்தரவிட்டது.

-பா.பாரதி.