மெரினா போராட்டத்துக்கு ஐகோர்ட் தான் தடை விதித்துள்ளது…..அமைச்சர் ஜெயக்குமார்

--

சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மெரினாவில் போராட்டம் நடத்த நாங்கள் தடை விதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் தான் தடை விதித்துள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு அமைதி காப்பதாக ரஜினி விவரம் தெரியாமல் பேசக்கூடாது. அரசின் அறிக்கையை படித்துவிட்டு பதில் கூறட்டும்’’ என்றார்.