சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிமினல், சிவில், அரசியலமைப்பு உள்ளிட்ட அனைத்து சட்டப் பிரிவுகளிலும்  நிபுணத்துவம் பெற்றவர் நீதிபதி எம். சத்யநாராயணன். அவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.  கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டடவர்,  பின்னர், கடந்த 2009ம் ஆண்டு  நிரந்த நீதிபதியாக உதவி உயர்வு பெற்றார். இவரது பதவிக்காலம் 2021 ஜூன் மாதம் வரை உள்ளது.

இந்த நிலையில், நீதிபதி எம்.சத்தியநாராயணன்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுஉள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசுபிறப்பித்துள்ளது.

இந்த பதவியில் நீதிபதி சத்தியநாராயணன், 4 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை  இவர் பணியாற்றலாம்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், 3வது நீதிபதியாக வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தவர் நீதிபதி  சத்யநாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.