சாலையில் பேரிகார்டு வைக்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு

மதுரை:

சாலையில் பேரிகார்டுகள் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இதில், சாலைகளில் தேவையில்லாத இடங்களில் பேரிகார்டு வைக்கக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் தான் பேரிகார்டு வைக்க வேண்டும்.

அதில் விளம்பரம் செய்யக்கூடாது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 100 மீட்டர் முன்பாக ஒளிரும் ஸ்டிக்கருடன் பேரிகார்டுகள் அமைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.