Random image

மருத்துவபல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் மயில்வாகனன் பெயரையும் பரிசிலிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில்  மற்ற விண்ணப்பதாரர்களுக்கு இணையாக முன்னாள் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜனின் பெயரையும் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி நாளை பணி ஓய்வு பெற உள்ளார்.  இதன் காரணமாக புதிய துணைவேந்தர் நிமனம் தொடர்பாக தமிழக அரசு   கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில்,  பல்கலைக்கழக சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் துணைவேந்தராக பதவி வகித்தவர்கள், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்ய வகை  செய்யப்பட்டுள் ளதை சுட்டிக்காட்டி, ஏற்கனவே துணைவேந்தர்களாக பதவி வகித்தவர்களையும், தகுதி பட்டி யலில் சேர்க்க கோரி பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மயில்வாகனன் நடராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பல்கலை சட்டப்படி, ஏற்கனவே துணைவேந்தர் பதவி வகித்தவர்களும், துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவர் என்றும்,  மயில்வாகனன் நடராஜன் பெயரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும்  தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மயில்வாகனன் நடராஜன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில் மனுதாரரின் மனுவை பல்கலைக்கழக நிர்வாகம் சட்டத்துக்கு உட்பட்டு  பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.