மும்பை

ஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் என்ன என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நடிகர் சஞ்சய் தத் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததற்கும், 1993 குண்டுவெடிப்பு நிகழ்ச்சிக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தார்.

புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட அவர் 8 மாதங்கள் முன்னதாகவே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

சஞ்சய் தத் தன்னுடைய தண்டனை காலத்தில் விசாரணையின் போது சிறையில் கழித்த 18 மாதங்களையும் சிறைத்துறை தண்டனையாக எடுத்துக் கொண்டுள்ளது.

சஞ்சய் தத் முதலில் 90 நாட்களும், பின்பு 30 நாட்களும் பரோலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்த்து பூனேவை சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை இரு நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சஞ்சய் தத்  பரோலில் வெளிவந்திருந்ததையும் பிரதீப் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இந்த அமர்வில் நீதிபதிகள் அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தனர்.

சிறைத்துறை டி ஐ ஜி, சஞ்சய் தத் விடுதலை பற்று சிறை சூப்பிரண்டுடன் கலந்தாலோசித்ததற்கான ஆதாரம் உள்ளதா அல்லது நேரடியாக இந்த விடுதலை அறிக்கை கவர்னருக்கு அனுப்பபட்டதா?

சஞ்சய் தத் எந்த நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்?

அவர் தண்டனையில் பல தினங்கள் பரோலில் இருந்ததால், அவருடைய நன்னடத்தையை சிறை நிர்வாகம் எப்படி முடிவு செய்தது?

இவ்வாறு பல கேள்விகளை உயர்நீதி மன்றம் கேட்டுள்ளது

இந்த கேள்விகளுக்கான பதிலை  ஒரு அறிக்கையாக  உடனடியாக  அளிக்கும்படி உத்தரவிட்டது.

 

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட சஞ்சய் தத் தனது சமீபத்திய படமான ”பூமி” படத்தின் ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார்.