சென்னை:

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மாயமானது தொடர்பான வழக்கில், அவரை கூலிப்படை வைத்து கடலுக்குள் வைத்து கொலை செய்ததாக சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர் பிரித்தி வெங்கடாச்சலம் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதிச் சேர்ந்த சுரேஷ் பரத் வாஜ் (வயது 50). தொழில் அதிபர். கடந்த ஜூன் 21ம் தேதி மாயமானார். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் ஒருவர், அவரிடம் ரூ.5 லட்சம் வரை கடனாக வசூலித்துள்ளார். திடீரென வேலைக்காரப் பெண் வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டதால், தான் கொடுத்த பணத்தை சுரேஷ் பரத்வாஜ் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக  சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர் பிரித்தியை பரத்வாஜ் சந்தித்து, பணத்தை பெற்றுத்தர உதவும்படி கோரியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே சமரசம் செய்tதாக தெரிவித்த பிரித்தி, சுரேஷ் பரத் வாஜிடம் இருந்து ரூ.65 லட்சம் வரை கறந்துள்ளார்.

இந்த நிலையில் பரத்வாஜ் காணாமல் போகவே இது குறித்து விசாரித்து வந்த போலீசார், கடைசியாக பரத்வாஜ் வக்கீல் பிரித்தி வீட்டுக்கு சென்றதை அறிந்து, வக்கீலிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து  வக்கீல் பிரித்தியுடம் தலைமறைவாக, பரத்வாஜ் கொலை சம்பந்தமான கூலிப்படையும் காவல்துறையிடம் சரணடைந்தது.

கூலிப்பபடையினரிடம் நடத்திய விசாரணையில், வக்கீல் பிரித்தி, பரத்வாஜ் கொலைக்கு கூலிப்படையிடம் பேசிய பணத்தை தர வில்லை என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை யின்போது, பரத்வாஜ் மற்றும் அவரது வேலைக்காரப் பெண்ணுக்கு இடையே சமாதானம் செய்வதாக காசிமேடு கடற்பகுதிக்கு பரத்வாஜை வரவழைத்த பரித்தி, கூலிப்படையினரை வைத்து  கடலுக்குள் படகில் அழைத்து சென்று,  அடித்து கொலை செய்து உடலை கடலில் வீசி விட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், தலைமறைவான பிரத்தீ, கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், தனது வக்கீல் நண்பரை சந்திக்க வந்தபோது காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கறிஞர் பிரித்தி, தனது நடவடிக்கை காரணமாக கவணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்று கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கடாச்சலம் என்பவரின் 2வது மனைவிக்கு பிறந்தவர் பிரித்தி என்றும், அவருக்கு  ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.