தேசிய தடகள போட்டி – உயரம் தாண்டுதலில் இந்தியர் சாதனை

தேசிய தடகள சங்கத்தின் ட்ராக் மற்றும் பீல்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் உயரம் தாண்டுதலில் வெற்றிப்பெற்ற தேஜஸ்வின் ஷங்கர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்

தேஜஷ்வின் ஷங்கர் உயரம் தாண்டுதலில் 2.24 மீட்டர் உயரத்தை கடந்து  மூன்றாவது இந்தியராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை தேசிய தடகள சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட டிராக் மற்றும் பீல்ட்  சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2.24 மீட்டர் தூரத்தை கடந்து வெளிப்புற பட்டத்தை தேஜஷ்வின் பெற்றார்.

அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் நான்கு போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி உயரம் தாண்டுதலில் ஷங்கர் முதலிடத்தை பெற்றார். தடகள போட்டியில் 2.29 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்த கன்வாஸ் பகுதியில் தனது வெற்றியை ஷங்கர் பதித்துள்ளார்.

உயரம் தாண்டுதலில் முதலில் 2.08,  2.13, 2.18 மற்றும் 2.21 என்ற புள்ளிகளை பெற்ற ஷங்கர் தன்னை எதிர்கொண்ட நான்கு வீரர்களை பின்னுக்கு தள்ளி 2.24மீட்டர் உயரத்தை கடந்தார். கழுத்தில் காயமடைந்த நிலையில் ஷங்கர் இத்தகைய  சாதனையை படைத்துள்ளார்.

விகாஸ் கவுடா  2006ம் ஆண்டு டிஸ்கர் த்ரோவை தோற்கடித்து வெற்றிப்பெற்றார். மோஹிந்தர் சிங் கில் 1969 ல் இருந்து 1971 வரையிலான போட்டிகளில் வெற்றிப்பெற்று ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். அதே வரிசையில் தற்போது ஷங்கர் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளார்.
வெற்றிபெற்ற நிலையில் அடுத்த என்ன செய்யப்போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உண்மையில் நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், நான் டிஸ்னி பகுதிக்கு செல்லலாம், அங்கு சென்றால் சில வாரங்கள் தங்கி பயிற்சி எடுக்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்

மேலும் ”அடுத்த வருடம் இது போன்று நடக்க விரும்பவில்லை. மூன்று பேருடன் நான் போராட வேண்டியிருந்தது. அடுத்த வருடம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். அதன் மூலம் நேரடி வெற்றியாளராக இருக்க முடியும்” எனவும் ஷங்கர் தெரிவித்தார்