புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இறுதி முடிவெடுக்கும் வகையில், உயர்மட்ட அளவிலான கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.
ஏனெனில், இந்த தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கான உபகரணங்கள் சீனாவின் ஹூவே நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகிறது. எனவே, இந்த 5ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதன் மூலமாக, அந்த உபகரணங்களை சீனாவிலிருந்து வருவிப்பதை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கடந்த திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் இதுகுறித்து விவாதித்தனர். மேலும், இதனோடு சேர்த்து, மொத்தம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
ஏனெனில், இது உள்நாட்டிலிருந்து மக்களின் தகவல்களைத் திருடி, அதை சீனாவிற்கு கடத்துகிறது என்ற புகார் இருந்து வருகிறது. அதேசமயம் இந்தக் கூட்டம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், கொரோனா காரணமாக, 5ஜி அலைக்கற்றை ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.