சீனா: அதிவேக புல்லட் ரெயில் பயணம் தொடக்கம்

பெய்ஜிங்:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அடுத்தத் தலைமுறை புல்லட் ரெயில் சீனாவில் தனது பயணத்தைத் துவங்கியது.

சீனாவின் இரு பெரும் நகரங்களான பெய்ஜிங்-&ஷாங்காய் இடையே 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரெயில் தனது பயணத்தைத் தொடங்கியது.

முதல் பயணமாக 2 நகரங்களிலிருந்தும் 2 ரெயில்கள் இன்று ஓடத் தொடங்கின. பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்ட ரெயில் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் பயணம் செய்து ஷாங்காயை அடைந்தது.

நடுவில் 10 ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் ஆயிரத்து 300 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும்

 

Leave a Reply

Your email address will not be published.