விரைவில் டில்லி மெட்ரோ உடன் இணையும் அரியானா அதிவேக ரெயில் பாதை

குருகிராம்

புதிய அதிவேக ரெயில் பாதை ஒன்றை அமைத்து டில்லி மெட்ரோவுடன் இணைக்க அரியானா அரசு திட்டமிட்டுள்ளது.

அரியானாவில் இருந்து டில்லி செல்ல வசதியாக டில்லி மெட்ரோவுடன் ஒரு அதிவேக ரெயில் பாதை அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டது.   அந்த ஆலோசனையின் இறுதிக் கூட்டம் முதல்வர் லால் கட்டர், மற்றும் அரியானா மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்றது.   அப்போது டில்லி மெட்ரோவுடன் இணைக்க புதிய அதிவேக ரெயில் பாதை அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ரெயில்  பாதை டில்லி மெட்ரோ முடியும் இடத்தில் இருந்து தனி பாதையாக குருகிராம் ரெயில் நிலையம் வரை 14 கிமீ தூரத்துக்கு அமைய உள்ளது.   இதில் 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும்.  இந்த பாதை அதன் பிறகு குருகிராம் 21ஆம் செக்டர் வரை விரிவாக்கம் செய்யப்படும்.  அங்கிருந்து அரியானா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் இணைக்கப்படும்.