தெலுங்கானாவில் வெயிலுக்கு 21 பேர் பலி!

ஐதராபாத்,

ற்போது வீசும் அனல்காற்றுக்கு தெலுங்கானா மாநிலத்தில்  21 பேர் பலியாகி இருப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு தென்மாவட்டங்களில் அனல்காற்று அதிகமாக வீசி வருகிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில், இப்போது வெயிலின் தாக்கல் அதிகரித்து காணப்படுகிறது.

 

பல மாநிலங்களில் வெயில் தாக்ககல் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. தமிழகத்தைபோல ஆந்திரா, தெலுங்கானா மாவட்டங்களிலும் அனல்காற்று வீசி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில், கடும் வெயிலுக்கு தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை  21 பேர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருக்கிறது. இதன் காரணமாக வயதானவர்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்திலும் இன்றும் நாளையும் அதிக வெப்பக்காற்று வீசும் என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.