Random image

மும்பை : பெரிய அலைகளால் குப்பை மேடான கடற்கரை

மும்பை

மும்பை மரின் டிரைவ் கடற்கரையில் பெரிய அலகள் குப்பைகளை இறைத்துள்ளது.

 

மும்பையில் உள்ள மரின் டிரைவ் கடற்கரை மிகவும் புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்றாகும்.   இந்த கடற்கரை ஓரத்தில் பல பெரிய பெரிய கட்ட்டங்கள் அமைந்துள்ளன.   அவற்றில் ஒன்றான ஆர்ட் டெகோ கட்டிடம் யுனெஸ்கோ நிறுவனத்தின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று என புகழ்பெற்ற ஒன்றாகும்.    இதைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

மும்பை துறைமுகம் சர்வதேச துறைமுகம் ஆகும்.   இங்கு பல நாட்டுக் கப்பல்கள் வருகின்றன.   இந்த கப்பல்களில் உள்ள குப்பைகள்  கடலில் கொட்டப்படுகின்றன.   இதில் பல பிளாஸ்டிக் குப்பைகளும் உள்ளன.   இந்தக் குப்பைகள் கடல்நீரில் மிதந்தபடி காணப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சமீபத்தில் மும்பை நகரில் பெய்த கனமழையின் போது வழக்கத்தை விட பெரிய பெரிய அலைகள் உருவாகின.  இந்த அலைகள் கடலில் மிதக்கும் அத்தனை குப்பைகளையும் மரைன் டிரைவ் கடற்கரையில் வாரி இறைந்துள்ளன.   இதனால் அந்த இடமே ஒரு குப்பை மேடாகிப் போனது.

கிட்டத்தட்ட 12 டன்கள் அளவுக்கு சேர்ந்த குப்பையை மாநகராட்சியின் 55 துப்புறவுத் தொழிலாளர்கள் கொண்ட குழு சுத்தம் செய்தது.   அவர்களுக்கு இந்த குப்பைகளை முழுவதுமாக அகற்ற சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் ஆனது.   மேலும் குப்பைகளால் அந்த இடமே ஒரு துர்நாற்றத்துடன் காணப்பட்டது.   இதை ஒட்டி மரைன் டிரைவ் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.