Random image

2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒழிக்க வேண்டும்…..சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்:

அதிக மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏதேனும் நல்ல பலன் உண்டானதா? வங்கிகளின் இன்றைய நிலையை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டால் என்ன பயன்?. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாக கையாளவில்லை’’ என்றார்.