கோவை:
கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில்  செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா மையம். இங்கு யோகா, மூச்சு பயிற்சி போன்ற பலவித கலைகள் கற்றுத் தரப்படுகிறது.
index-main-2
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள ஈஷா யோகா மையம், தற்போது இரு பெண்களை கட்டாயப்படுத்தி சந்நியாசினியாக மாற்றியுள்ளதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது.
கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜின் மனைவியான சத்யவதி, தங்கள் மகள்கள் கீதா, லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து, வைக்கப்பட்டிருப்பதாகவும்,   அவர்களைப் பார்க்க  பெற்றோரான எங்களை  அனுமதிக்க மறுக்கின்றனர் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்திருந்தார்.
isah
மேலும் எங்களது மகள்களை போல பலரும் இதுபோல் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களையும் காப்பாற்றுங்கள் என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் அடங்கிய அமர்வு,  கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா மையத்திற்கு விஜயம் செய்து, அங்கிருப்பவர்களின் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
மனுதாரர் சத்யவதியும் நீதிபதியுடன் சென்று மகள்களைச் சந்திக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து நேற்று  மதியம் 3 மணியளவில்  கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் ஈஷா மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட கண்காணிப்பாளர் ரம்யா பாரதியும்  சென்றார்.
isha
நேற்று மதியம் 3 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு சென்ற  அவர்கள் அங்கு தங்கியுள்ள கீதா, லதா என்ற, மனுதாரரின்  இரண்டு பெண்களிடமும்,  ரமேஷ் என்பவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது  அவர்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.  இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை விசாரணை நடைபெற்றது.
மாவட்ட நீதிபதியின் விசாரணை முடிந்தபிறகு,  ஈஷா யோகா மையம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆனந்த், ஏகா, தன்னார்வலர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர்  கூறியதாவது:-
கோவை ஈஷா யோகா மையத்தில்  யாரையும் மூளைச்சலவை செய்து தங்க வைக்கவில்லை. அவர் களின் விருப்பத்தின் பேரில் தான் அனைவரும் தங்கியுள்ளனர். இங்கு யாருக்கும் போதை மருந்தும் கொடுப்பதில்லை. இங்கு தங்கி சன்னியாசம் பெற்றிருப்பவர்களுக்கு உடனடியாக சன்னியாசம் அளிப்பதில்லை. அவர்கள் விண்ணப்பித்து அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் சன்னியாசம் அளிக்கப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளாகவே ஈஷா மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாகவும், தாங்கள் வனப்பகுதி எதையும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறினார். வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் எதுவும் கட்டப்பட வில்லை என்றும் கூறினார்.  அரசு  அனுமதி பெற்றுத்தான் கட்டிடங்கள கட்டப்பட்டுள்ளன.  மேலும் எங்களிடம் உள்ள நிலங்களுக்கு உரிய பட்டா இருப்பதாகவும், அதை ஏற்கனவே உறுதி செய்து  வன அதிகாரிகளே அறிக்கை அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈஷா யோகா மையம் மீது யாரும் புகார் கூறவில்லை. தவறு செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களின் பெற்றொர்கள் மட்டுமே ஈஷா மீது புகார் கூறுவதாகவும் கூறினார்.
Isha-Yoga-Center-the-countys-chief-judge-in-the-trial-of-4_SECVPF
இதையடுத்து, மனுதாரரின் மகள்களான  லதா, கீதா ஆகியோர் கூறியதாவது:-
எங்கள் விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். நாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறோம். யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை.  கடந்த ஜூலை மாதம் 19ந் தேதி ஈஷா யோகா மையத்தில் எங்கள் பெற்றோர் எங்களுடன் தங்கியிருந்தனர். ஆனால் அதன்பிறகு அவர்களை யாரோ தூண்டி விட்டு எங்கள் மீது புகார் கூறியுள்ளனர். எங்களிடம் நடந்த விசாரணையில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள்  கூறினர்.