டில்லி:

பஞ்சாப், ஹரியானாவில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு டில்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது, காற்று மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சண்டிகர் உயர்நீதிமன்றம் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் மாலை 3 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று மாலை 6.30 மணியிலிருந்து 9.30 மணி வரையிலே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். .

மாலை 6.30 மணிக்கு முன்னரோ, இரவு 9.30 மணிக்கு பின்னரோ பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உரிமங்களில், இந்த ஆண்டு 20 சதவிதம் மட்டுமே உரிமம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.