தி நகரில் சென்னை சில்க்ஸ் கட்டுமான பணிக்கு தடை….உயர்நீதிமன்றம்

சென்னை:

சென்னை தி நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதன் பின்னர் முழு கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘‘எதன் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது?. கட்டட அனுமதி வழங்கிய 20 நாளில் 40 சதவீத கட்டடம் கட்டப்பட்டது ஆச்சரியமாக உள்ளது.

கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.