அமெரிக்காவின் ஹார்வார்டு யுனிவர்சிட்டியில் சீட் வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி..

சென்னை:  உலகின் பிரபலமான அமெரிக்காவின் ஹார்வார்டு யுனிவர்சிட்டியில் சீட் வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி செய்தாக சென்னையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிச்சாலையில் வசிக்கும் சுனில் குமார் ஹண்டா என்பவரின் மகன் உயர்படிப்பு படிக்க ஹார்வர்டு பல்லைக்கழக்கழகத்தில்  இடம் வாங்கித் தருவதாக ராஜசேகரன் என்பவர் கூறியுள்ளார். இதுபோல, மேலும், சிலரையும் ராஜசேகரன்,  குமார் ஹண்டாவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

அவர்கள்  கேட்டபோதெல்லாம், லட்சக்கணக்கில் சுனில் குமார் ஹண்டா பணம் கொடுத்து வந்துள்ளார். மொத்தம், 58 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாயை கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அவரது மகனுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டதாக போலி ரசீதுகளை கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

இந்த ரசீதுகளை கொண்டு குமார் ஹ்ண்டா விசாரித்தபோது, அது போலி என்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, காவல்துறையில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில்,  ராஜசேகரன் மற்றும் அவருகு உறுதுணையாக செயல்பட்ட அக்ஷயா அஸ்வந்தி, அவரது தந்தை செம்பையா விஸ்வநாதன், அவரது தாய் ஆகியோரையும் கைது செய்த காவல்துறையினர்,  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.