ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகள்
ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகளைப் பற்றி சில விவரங்கள் :-

நாத் த்வாரா சிவன்
சுமார் 20 கிமீ தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக ஒரு ஈசன் சிலை கிட்டத்தட்ட இப்போது கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நாத் த்வாரா. இதன் உயரம் 251 அடியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டிமுடிக்கும் தறுவாயில் உள்ளது.
ரிஷிகேஷ்
உத்ரகாண்ட் உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள இந்த ஈசன் சிலை, கங்கை நதியின் கரையில் கண்கள் மூடிய நிலையில் தியானம் செய்வது போன்று காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்மாத் நிகேதன் ஆஸ்ரமத்தில் இருப்பதால் சிலையின் கம்பீரமும், ஆசிரமத்தின் அமைதியும் நம்மை வேறொரு லோகத்துக்கு கொண்டுசென்றுவிடும். இந்த சிலையை கொண்ட பார்மாத் நிகேதன் ஆஸ்ரமதில் பக்தர்கள் தங்குவதற்காக 1000 அறைகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு. சிலையின் உயரம் 123 அடி.
முர்தேஷ்வர், கர்நாடகா
அரபிக்கடல் ப்ரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முர்தேஷ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் ப்ரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய ஈசன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூர்ய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த ஈசன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுர்சாகர் ஏரி
சுர்சாகர் ஏரியில் ஒரு ஈசன் சிலை உள்ளது. இது குஜராத் மாநிலம் பரோடா மாநகருக்கு அருகில் உள்ளது.
சுர்சாகர் ஏரியில் அமைந்துள்ள அழகிய சிவன் சிலை மிகவும் ப்ரம்மாண்டமாக 120 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
விஸ்வாமித்ரா நதிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை நின்ற நிலையில் இருக்கிறது.
ஆதியோகி
கோயம்புத்தூர் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 112 அடி உயரமுள்ளதாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் இருக்கும் இடம் காடுகளை சுற்றி அமைந்துள்ளது.
நம்ச்சி, சிக்கிம்
நம்ச்சி என்றால் ‘வானுயரம்’ என்று அர்த்தம். அதேபோல அந்த நகரத்திலுள்ள சித்தேஷ்வர்தாம் எனும் இடத்தில் வானை முட்டும் உயரத்தில் மிகவும் ப்ரம்மாண்டமாக 108 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த ஈசன் சிலை.
மேலும் இந்த சிலை அமையப்பெற்றிருக்கும் சித்தேஷ்வர்தாம் பகுதியில் 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்கள் உள்ளன. அதோடு கங்சென்ஜங்கா மலைச்சிகரத்தை இந்த இடத்திலிருந்து பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்
மங்கள் மகாதேவ்
101 அடி உயரம் கொண்ட ஈசன் சிலை ஹர்யானாவின் கங்க்டான் எனும் பகுதியில் அமைந்துள்ளது.
பெங்களூரு, கர்நாடகா
பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த ப்ரம்மாண்டமான சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது.
இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த ஈசன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர்.
ஜபல்பூர், மத்யப்பிரதேஷ்
மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்தில் உள்ள கச்னார் எனும் இடத்தில் இந்த ஈசன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 76 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருப்பதுடன், கண்கள் மூடிய நிலையில் சாந்த ஸ்வரூபியாக சிவபெருமான் காட்சி தருவது நம் கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்யும். மேலும் இச்சிலை அமைந்திருக்கும் கச்னார் பகுதி சில மாதிரி ஜோதிர்லிங்கங்களுக்காகவும் பிரபலம்.
பீஜப்பூர், கர்நாடகா
உலகின் உயரமான சிலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த ஈசன் சிலை பீஜப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது.