Random image

நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும்….நிதின் கட்காரி

மும்பை:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சி மற்றும் தொண்டு அமைப்புகள் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில்,‘‘ தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்வது ஒருபோதும் நிறுத்தப்படாது. சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டே தீரும். நீங்கள் நல்ல சேவைகளை விரும்பினால் அதற்கான தொகையை செலுத்தத்தான் வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.