சென்னை:

நெடுஞ்சாலைகளில், சாலையின் நடுவே காங்கிரீட்டிலான தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆங்காங்கே இடைவெளிகள் விடப்பட்டு இருக்கும். இந்த இடைவெளி மூலம் சிலர், சாலையில்  அடுத்தப்பக்கத்துக்கு செல்லும்போது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குகளில் சிக்கி விடுகின்றனர்.

இதையொட்டி, விபத்துக்களைத் தடுக்கும் முயற்சியில், பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதை தடுக்கும் வகையிலும், இடைவெளிகள் அனைத்தையும் மூடும் முயற்சியில்  நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

சென்னை ஓஎம்ஆர் உள்பட பல இருவழிப்பாதை நெடுஞ்சாலைகளில் சாலையின் நடுவே  காங்கிரீட்டிலான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலை சாலைகளில் உள்ள மீடியன்களின் உயரம் 1.2 மீட்டர் உயரத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், ஆங்காங்கே 30 அடி அல்லது 50 அடிகளுக்கு இடையில் சாலை விளக்கு கம்பங்கள் அமைக்கும் வகையில் இடைவெளி விடப்பட்டிருந்தது.

இந்த இடைவெளி வாயிலாக, பொதுமக்கள், புகுந்து மறுகரைக்கு செல்ல முயலும்போது, எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் நோக்கில், சாலையில் நடுவே விடப்பட்டிருந்த இடைவெளிகளை அடைக்கும் முயற்சியில் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த இடைவெளியை பயன்படுத்தி சுமார் 80 சதவிகித பாதசாரிகள் சாலையை கடக்க முயற்சி செய்கின்றனர். இதனால் ஏராளமான விபத்துக்குள் ஏற்பட்டுள்ளது. இதனால், இடைவெளியை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை,ஓஎம்ஆர் சாலை  உட்பட பல சாலைகளில் உள்ள இடைவெளிகள் மூடப்படும் என்றும் என்றும்,   போக்குவரத்து காவல்துறையினரின் ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.