Random image

எடப்பாடி மீதான புகார்: 17ந்தேதி விரிவான அறிக்கை தர லஞ்சஒழிப்புத் துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை  வரும் 17ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தர வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

முதல்வர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க செப்டம்பர் 12ம் தேதி வரை சென்னை உயர்நீதி மன்றம்  அவகாசம் வழங்கி இருந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், லஞ்ச ஒழிப்புத் துறையின் கால அவகாசத்தை ஏற்று வரும் 17ந்தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழக முதல்வர்மீது ஊழல் புகார் லஞ்ச ஒழிப்பு துறை யிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில், முதல் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளார்.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பொது ஊழியரான எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும்  எடுக்க எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என லஞ்ச ஒழிப்பு துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதி மன்றம், தற்போது வரும் 17ந்தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.