விவசாயிகள் இயற்கை மரணத்திற்கான இழப்பீடு 20ஆயிரமாக உயர்வு!

சென்னை,

ழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை மரணத்திற்கான இழப்பீடு தொகை 20 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இழப்பீடு இரு மடங்காக உயர்த்தியதாக கூறப்பபட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள்  இயற்கை மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த இழப்பீட்டுத் தொகை தற்போது  இருமடங்காக அதாவது 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.