அசாம் மாநில தூதராக தங்கம் வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ் நியமனம்

 உலக ஜூனியர் தடகள போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை தட்டி வந்த  இந்திய வீராங்கனை  ஹிமாதாஸ்-க்கு அசாம் மாநில அரசு, மாநில  தூதர் பதவி வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.

இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாசுக்கு சமீபத்தில் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஹிமா தாசை அசாம் மாநில தூதராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார்.

இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாஸ்  உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அதுபோல  ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள்400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் அவரை அசாம் மாநில அரசு தூதராக நியமனம் செய்து கவுரவப்படுத்தி உள்ளது.