3வது தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸ்!

--

பிரேக்: செக் குடியரசில் நடைபெற்றுவரும் கிளாட்னோ மெ‍மோரியல் தடகளப் போட்டிகளில், மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில், இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம் அவர் மொத்தம் 3 சர்வதேச தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இவரின் முதல் தங்கப்பதக்கம் போலந்து நாட்டில் நடைபெற்ற போஸ்னன் தடகளப் போட்டியில் 200 மீட்டர் பிரிவில், ஜுலை 2ம் தேதி கிடைத்தது. பின்னர், அதே போலந்து நாட்டில் நடைபெற்ற குன்டோ தடகளப் போட்டியில் 200 மீட்டர் பிரிவில் ஜுலை 8ம் தேதி கிடைத்தது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்நத் ஹிமா தாஸ், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏற்கனவே தேசிய சாதனையை வைத்திருப்பவர். இவர் செக் குடியரசில் தனது 3வது தங்கப் பதக்கத்தை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 23.43 விநாடிகள்.