தம்மை சந்தித்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் இமாச்சல பிரதேச முதல்வர்

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை அவர் சந்தித்துள்ளார். அவர் சந்தித்த அந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அடுத்த 3 நாள்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

மேலும், அவர் தனது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வார் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.