இமாச்சலப்பிரதேசம்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9பேர் பலி

இமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிந்ததில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

bus

இமாச்சலப்பிரதேசம் சிர்மாவர் மாவட்டத்தில் டடாஹூ பகுதியில் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று நிலைத்தடுமாறி அருகில் இருந்த பள்ளித்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதேபோல், டெல்லியில் இருந்து சிம்லாவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை தனியார் பேருந்து இன்று பிற்பகல் சிம்லா- சோலான் எல்லைப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பயணிகள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed