இந்தி நடிகர் அம்ரிஷ் புரி பிறந்தநாள்: சிறப்பு கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்

மும்பை:

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர்  அம்ரிஷ் பூரியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபல வலைதளமான கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

பாலிவுட் சினிமா உலகில் தனக்கென தனி பாதை அமைத்து, பல வகையான கதாபாத்தித்தில், குறிப்பாக வில்லன் ரோலில்  பல ஆண்டுகளாக தனி ஆவர்த்தனம் நடத்தி வந்தவர் அம்ரிஸ் பூரி.

பஞ்சாபை சேர்ந்த பூரி, ஆரம்ப காலத்தில் நாடக நடிகராகவும், பின்னர் சினிமாவில் சேர்ந்து பிரபலமான நடிகராக உயர்ந்தவர். சேகர் கபூர் இயக்கிய மிஸ்டர் இந்தியா படத்தில் இவர் நடித்த மொகாம்போ கேரக்டர், அம்பரிஷ் பூரியை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியது.

மேலும், இண்டியானா ஜோன்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தனது  40 வயதில் சினிமாவுக்குள் நுழைந்த அம்பரிஷ் தனது மரணம் வரை நடித்துக் கொண்டிருந்தார்.

இந்தி தவிர கன்னடம், மராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, தமிழ்  உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். ரஜினி  நடித்த தளபதி, பாபா படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இன்று 87வது பிறந்த நாள் இதையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.