Random image

இந்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை : வெங்கையா நாயுடு

டில்லி

ந்தி மொழி இல்லாமல் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.

நேற்று முன் தினம் டில்லியில் இந்தி தினம் கொண்டாடப்பட்டது.  அதை ஒட்டி டில்லி நகரில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு நிகழ்ச்சி ஒன்றை அமைத்திருந்தது.   இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தனது உரையில் வெங்கையா நாயுடு, “இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் நான் எனது இளம் வயதில் கலந்துக் கொண்டேன்.   ஆனால் நான் பிறகு இந்தி மொழி இல்லாமல் நாட்டில் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என அறிந்துக் கொண்டேன்.   டில்லிக்கு வந்த புதிதில் நான் தப்பும் தவறுமாக இந்தி மொழி பேசுவேன்.

ஆயினும் என்னை அனைவரும் ஒதுக்காமல் ஏற்றுக் கொண்டனர்.    ஆங்கிலம் என்பது பிரிட்டிஷார் நம்மிடம் விட்டு சென்ற ஒரு நோய்,   அதே நேரத்தில் தாய்மொழி அனைவருக்கும் அவசியமாகும்.  ஆகையால் தொடக்கக் கல்வி அனைவருக்கும் தாய் மொழியில் இருந்தாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.