டில்லி,

ட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற பிறகு இந்தி திணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு, இந்தி எழுதப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது  இந்தி மொழியை அனைத்து மாநில பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,  நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் அதிகரிக்கும் பொருட்டு இந்தி மொழியை கட்டாயமாக்க பள்ளிகளுக்கு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், 1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையின் அடிப்படையிலும் இந்த  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.