டெல்லி:

இந்தி இல்லாமல் இந்தியா செயல்பட முடியாது என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டாய இந்தி திணிப்பு இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இந்தி தான் நமது தேசிய மொழி. இந்தி மொழி இல்லாமல் இந்தியாவால் செயல்பட முடியாது. இந்தி தான் நமது தாய் மொழி. அது தான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.

எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள எதிர்ப்பு இருக்க கூடாது. ஆங்கிலம் கற்றுக் கொண்டவுடன் அதற்கு ஏற்ப ஆங்கிலேயேர்கள் போல் நமது மனநிலை மாறிவிடுகிறது. இது நல்லதல்ல. இது நாட்டின் நலன் சார்ந்தது கிடையாது.

இந்த நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள், வாழ்க்கை அர்ப்பணித்தவர்களில் சிலர் மட்டுமே வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெங்கையாவின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வளைதளங்களிலும் நாயுடுவின் பேச்சுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் குவிந்து வருகிறது.