டெல்லி:

பிரபல பாடகி கனிகா  கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் அவருக்க பாசிடிவ் என ஆய்வு முடிவுகள் வந்திருந்த நிலையில், 3வது முறை நடத்தப்பட்ட ஆய்வு முடிவிலும் அவருக்கு கொரோனா தொற்று தாக்கியுள்ளது உறுதியாகி உள்ளது.

கனிகா கபூர்  கடந்த மாதம் (மார்ச்)  11ம் தேதி முதல் லக்னோவில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
அந்த நட்சத்திர ஹோட்டலில் கனிகா கபூர் பஃபே உணவு சாப்பிட்டதாகவும், லாஃபியில் பல விருந்தினர்களுடன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இவரது பார்ட்டியில், ஏராளமான எம்.பி மற்றம் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பங்கேற்றதால், அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு கொரோனா சோதனை நடைபெற்றது. அவர்களை  தனிமைப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதற்கிடையில், சோதனை முடிவில் கனிகா கபூர் தவிர யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே முதலில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில்,  கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் 3வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்தி பாடகியாக கனிகா கபூர் லண்டன் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.