10 வருடங்களில் இந்தி பேசுவோர் எண்ணிக்கையில் 10 கோடிபேர் உயர்வு

மும்பை

டந்த பத்தாண்டுகளில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கையில் 10 கோடி பேர் அதிகரித்துள்ளனர்.

இந்திய மொழி ஆராய்ச்சிக் கழகம்  சமீபத்தில் அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.   இந்தியாவில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன.  அம்மொழிகளைப் பேசுவோரின் தற்போதைய எண்ணிக்கை கணக்கிடப்பட்டு இதற்கு பத்தாண்டுகளின் முன்பு அதே மொழிகளை பேசுவோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இந்திய மொழிகளில் இந்தி மொழி பேசுவோரின் எண்ணிக்கை இந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.   இந்த பத்தாண்டுகளில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 10 கோடி அதிகரித்துள்ளது.   தற்போது இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 52 கோடியை எட்டி உள்ளது.

இம்மொழிகளில் சமஸ்கிருதம் கடைசி இடத்தில் உள்ளது.  ஆனால் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை அதிக சதவிகிதம் உயர்ந்துள்ளது.  அதே நேரத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவே அதிகரித்துள்ளது.    அத்துடன் பெரும்பாலான எல்லைப் புற மக்கள் தங்கள் தாய் மொழியை விட இந்தியை அதிகம் பேசுவதால் இந்த உயர்வு அதிகரித்துள்ளது.

இந்த மக்களில் சிலர் ஆங்கிலம் தங்கள் தாய் மொழி என கூறுவதையும் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை  அதிகரித்ததையும் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.   இந்த கணக்கெடுப்பு இந்திய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கான கணக்கெடுப்பு மட்டுமே ஆகும்.   ஆங்கிலம் பேசுவோர்  மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அதிகம் உள்ளனர்.

இந்திக்கு அடுத்த படியாக காஷ்மீரி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   அதன் பிறகு குஜராத்தி மணிபுரி, பெங்காலி ஆகிய மொழிகள் பேசுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் தென் இந்திய மொழிகளான தமிழ் மொழி பேசுவோர் எண்ணிக்கை 5% மற்றும் மலையாளம் பேசுவோர் எண்ணிக்கை 10% குறைந்துள்ளது.

அதிக மக்கள் பேசும் மொழியாக இந்தி முதல் இடத்தில் உள்ளது.  அடுத்து வங்க மொழியும் அதை அடுத்து தெலுங்கும் உள்ளது.

You may have missed