பெங்களூரு,

த்திய அரசின்  இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெங்களூரில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஆங்கில எழுத்துக்கு பதில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது.

இது கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா,  `ரெயில் நிலையங்களில் இந்தித் திணிப்பை ஏற்கமுடியாது. பெங்களூரு மெட்ரோ, மாநில அரசின் திட்டம்’ என்று  காட்டமாக கூறினார்.

‘பெங்களூரு மெட்ரோ, பெரும்பாலும் மாநில அரசின் நிதியிலேயே உருவானது, இது, மாநில அரசின் திட்டம். இங்கு இந்தியைத் திணிப்பது ஏற்றுகொள்ள இயலாது.

இந்தி என்பது வடஇந்தியாவில் சில மாநிலங்களில் பேசும் மொழியே தவிர, நாடு முழுவதும் பேசும் மொழி கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா போராடும்’, என்றார்.

சமீபத்தில், ‘தேசிய மொழியான இந்தியை நாட்டு மக்கள் அனைவரும் கற்க வேண்டும்’ என்று வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.