பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் ஆன இந்து தலித் பெண்..!

இஸ்லாமாபாத்: இந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் ‘ஒருநாள் தலைவராக’ பணியாற்றியுள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் மேலவையான சென்ட் தலைவர் ஃபைசல் ஜாவித் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் கோலி சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி கோலி, இந்து சமூகத்திலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. இவரின் கோலி சமூகம், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வருகிறது.

இந்த கிருஷ்ணகுமாரிதான் பாகிஸ்தான் செனட் சபையின் ஒருநாள் தலைவராக பணியாற்றி, உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஒரு பெண் உறுப்பினரை (அதுவும் சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த) கெளரவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரவேற்பையும் பெற்றுள்ளது.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி