ஸ்ரீநகர்:

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரருக்கு ஆதரவாக இந்து அமைப்பு நடத்திய பேரணியில் தேசிய கொடி ஏந்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாத இறுதியில் காஷ்மீர் மாநிலம் ஹிரன்நகரில் ரசனா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமதி தனது குதிரைகளுகு தண்ணீர் கொடுப்பதற்காக சென்றார். அப்போது கதுவா பகுதியில் அவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜூரியா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விடுதலை செய்யக் கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அமைப்பின் கூட்டணி கட்சியான பாஜக கலந்துகொள்ளாமல் விலகி நின்றது. இந்த பேரணியில் பலர் கலந்துகொண்டனர். பேரணியில் இந்திய தேசிய கொடியை ஏந்த போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர்.

உருது பத்திரிக்கையாளர் நசீர் மசூதி என்பவர் இந்து ஏக்தா மஞ்ச் தொண்டர்கள் தேசிய கொடியுடன் நடத்திய இந்த பேரணியின் புகைப்படத்தை முதன் முதலில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முக்தி கூறுகையில், ‘‘பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கதுவா என்பவருக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் பேரணி நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார். இந்த சம்பவம் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது. கைது செய்யப்பட்ட தீபக்கை காப்பாற்ற போலீசார் முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.