தமிழக கோவில்களில் பூ விற்க தடை : அறநிலையத்துறை அறிவிப்பு

துரை

றநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பூக்கடை நடத்த அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

 

மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் தீபிடித்ததால் மண்டபம் முழுவதும் தீயில் கருகியது.   இதை ஒட்டி கோவில் வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளையும் அகற்ற தமிழக அரசு ஆணை இட்டது.

அதன் பிறகு பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் மட்டும் கோவில் வளாகத்துக்குள் விற்கலாம் என அறநிலையத்துறை கடந்த ஜூன் 7ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.   இந்நிலையில்  கோவில் வளாகத்துக்குள் கடை நடத்துவது குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்வ்விசாரணைக்கு  வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை, ”தமிழக அரசு கோவில் வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.   ஆயினும் அறநிலையத்துறை பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கலாம் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

தற்போதுஅரசின் ஆணைக்கிணங்க அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறுகிறோம்.   இனி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அனைத்துக் கொவில்களிலும் பூக்கடை உள்ளிட்ட எந்தக் கடையும் நடத்த அனுமதி இல்லை” என தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Hindu endowment board denied permission for flower shops in temples
-=-