சென்னை,

டிகர் கமலஹாசன் வார இதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், இந்து தீவிரவாதம் இல்லை என்று கூறிய  கருத்தால் சர்ச்சை தற்போது ஏற்பட்டுள்ளது.

அந்த வார இதழில் செய்தியாளர்  தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறதா இந்து அமைப்புகள் என்ற கேள்விக்கு  பதிலளித்த நடிகர் கமல்,

“வலதுசாரிகள் இனி இந்துத்துவ தீவிரவாதம் இல்லை என்று கூறமுடியாது என்றும், அது அவர்கள் அணிக்குள் புகுந்து விட்டது. இதனால் எந்தப் பயனும் கிடையாது என்றார்.

மேலும், தற்போது இருக்கும்  கேரள மாநிலத்தைப் போல் தமிழ்நாடும் சமூக நீதி வழங்கும் மாநிலங்களுக்கு ஒரு முன்னுதரணமாக மாறும்” என்றும் கூறியிருந்தார்.

கமலின் இந்த கருத்துக்கு பாஜகவினரிடையே எதிர்ப்பை கிளம்பி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, கமல் கூறியதற்கு ஆதாரம் இருந்தால், அதை அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.