ராம கோபாலனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

--

கோவை:

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பசு பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கலந்து கொண்டு பேசினார்.

மாநாடு முடிந்து மேட்டுப்பாளையத்தில் கட்சி பிரமுகர் வீட்டில் ராம.கோபாலன் தங்கினார். இந்த நிலையில் அவருக்கு இன்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருந்தது.

இதைதொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.