(மாதிரி படம்)

யாழ்ப்பாணம்:

லங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட இந்து கோவில் சிலை உள்பட பல கோவில்களில் உள்ள விக்கிரங்கள் மர்ம நபர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது. இது அங்குள்ள தமிழர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி வடக்கு இலங்கையில், சீரமைப்பை தொடர்ந்து, இந்திய இராணுவத்தினரால் சிறு கோவில் கட்டப்பட்டது. மேலும் பல கோவில்கள் அந்த பகுதியில் உள்ளன.

இந்நிலையில் இன்று மகா சிவராத்திரியை யொட்டி, அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்கள் கோவிலுக்கு செல்ல உள்ள நிலையில், வடங்கு இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள சில கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைமன்னார் பகுதியில்உ ள்ள லிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிலைகள், மன்னார் தாழ்வுப்பாடு கீரி சந்தி எனும் இடத்தில் இருந்த ஆலையடி பிள்ளையார் சிலை,  தள்ளாடி அருகே திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஆகியவை உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுடிகறது.

ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒடுக்கிய நிலையில், தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இந்துகோவில்கள் உடைக்கப்பட்டு, அந்த இடங்களில் புத்த கோவில்கள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்து கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழர் பகுதியில் உள்ள சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.