அலிகார்: 

காந்தி உருவ பொம்மையை சுட்டு எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெயிலில் வந்தவர்க ளுக்கு, இந்து மகா சபை பாராட்டு விழா நடத்தியுள்ளது. இதில், காந்தி பொம்மையை சுட்ட பூஜா ஷகுன் பாண்டேவுக்கு வீரவாள் பரிசு அளித்து இந்து மகாசபை கவுரவ்ப்படுத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி 30-ம் தேதி காந்தி நினைவுநாள் அன்று மாகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்து மகாசபை அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அதில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே காந்தியின் புகைப் படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன்  காந்தி உருவ பொம்மையை எரித்து கோட்சே வாழ்க என கோஷமிடும் காட்சியும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினர் ஷாகுன் பாண்டே உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் கடந்த 14ந்தேதி பெயிலில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களுக்கு இந்த மகா சபை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பபட்டது.  இந்து மகா சபையின் தேசிய தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காந்தி பொம்மையை சுட்ட பூஜா ஷகுன் பாண்டே[வக்கு  பகவத் கீதையையும் வாளையும் கொடுத்து  பாராட்டினார்.

மேலும், அவர்களுக்காக நீதிமன்றத்தில்  வாதாடிய வழக்கறிஞர்களும் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். பாராட்டு விழா முடிந்த பின்பு உணவு விருந்தும் நடைபெற்றுள்ளது.