மாகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்து மகாசபை அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே காந்தியின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gandhi

இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நிலையில் சுதந்திரத்திற்காக போராடி அதனை பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்தி. இந்திய மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டியதுடன், பல்வேறு போராட்டங்களையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் முன்னெடுத்தார். அதன்பின்னர். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

இதனை தொடர்ந்து 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காந்தியை இந்து அமைப்பை சேர்ந்த நாத்துராம் கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார். அதையடுத்து கைது செய்யப்பட்ட நாதுராம் கோட்சே அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டு 1949ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சாகும்வரை தூக்கிலிடப்பட்டார். இந்தியா பிரிவினைக்கு காந்தி ஆதரவாக இருந்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

காந்தியடிகள் இறந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் நினைவஞ்சலியை செலுத்தினர். நாடு முழுவதும் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அலிகாரில் இந்து மகாசபை அமைப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

hindu4

காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதை கொண்டாடும் விதமாக இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, “ காந்தி புகைப்படத்தை துப்பாக்கியால் மீண்டும் சுட்டுள்ளார். அதன்பின்னர் கோட்சே உருவபடத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்”. இந்து மகாசபை அமைப்பினரால் காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி யுள்ளனர்.

இது குறித்து அலிகார் போலீசார் கூறுகையில், ” அலிகாரில் பூஜா ஷகுன் பாண்டே அவரது கணவர் அஷோக் பாண்டே மற்றும் அவர்களுடன் சேர்ந்து 12 பேர் தங்கள் வீட்டில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் அனைவரும் காந்தியை ஏர் ரைபில் கொண்டு சுடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் உட்பட 12 பேர்மீது 147, 148, 149, 295(a), 153(a) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

[embedyt]https://youtu.be/aiH_0zJZImE[/embedyt]