வாஷிங்டன்:
மெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம்  ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகமாகும்..
இந்த பல்கலைகழகத்தில், இந்தியாவின் பாரம்பரியமான  ஹிந்து மதம் குறித்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை முன்னிட்டு ஹிந்து மதப் பிரசாரகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரோமன் கத்தோலிக்கத்தை பிரபலப்படுத்துவதற்காக துவங்கப்பட்டுள்ள ஜார்ஜ்டவுன் பல்கலையில் வழக்கமான பாடங்களுடன், மதம் தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அனைத்து புகழ் பெற்ற மதங்களை பற்றியும் அங்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி, ஒவ்வொரு மதம் குறித்த வகுப்புகள் எடுப்பதற்காக, தனித்தனியாக ஆசிரியர்கள் உள்ளனர்.
அந்த வரிசையில், அமெரிக்க பல்கலைகளில் முதன்முறையாக ஹிந்து மதம் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதற்காக, பிரம்மசாரி விரஜ்விகாரி சரண், 31 என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
wpost sarn-2
பிரிட்டனில் பிறந்த இவர், இந்தியாவில் ஹிந்து மதம் குறித்து  பயிற்சி பெற்றார்.  அதன்பிறகு எடின்பர்க் பல்கலையில்  சமஸ்கிருதத்தில், பிஎச்.டி., படிப்பை முடித்தார்.
ஏற்கனவே  பிரிட்டனின் வேல்ஸ், லண்டன் பல்கலைகளில், ஹிந்து மதம் குறித்து பாடங்களை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜார்ஜ்டவுன் பல்கலையில் படிக்கும், 300க்கும் மேற்பட்ட ஹிந்து மதம் குறித்து படிக்கும்,  மாணவர்களுக்கு ஹிந்து மதம் குறித்த பாடம் எடுப்பதற்காக, இவரை அழைத்து வந்துள்ளது அந்த பல்கலை நிர்வாகம்.