போபால்:

த்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் திரளமான சாமியார்கள் காவிக்கொடியுடன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இது வியப்பாக  உள்ள நிலையில்,  பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி 1989ம் ஆண்டு முதல் பாஜகவிடம் உள்ளது. அகு இந்த முறை கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில், மூத்த அத்வானியின் மகள் பிரதீபா அத்வானிக்கு கட்சி அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. அவர் மறுப்பு தெரிவிக்கவே தற்போது சர்ச்சைப்புகழ் பிரபல இளம்பெண் சாமியாரான பிரக்யா சிங் போட்டியிடுகிறார்.

அங்கு கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில்,  சாத்வி பிரக்யாவுக்கு எதிராக, கம்ப்யூட்டர் பாபா எனப்படும் பிரபல சாமியார் தலைமையில் ஏராளமான சாதுக்கள் களமிறங்கி உள்ளனர்.   அவர்கள் அனைவரும் திக் விஜய் சிங் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்திய நிலையில், அவருக்கு ஆதரவான பேரணியிலும் காவிக் கொடியுடன் பங்கேற்றனர். இது பாஜகவுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போபாலில், இந்துத்துவாவை முன்னிறுத்தி, சாத்வி பிரக்யா சிங் தேர்தல் பிரசாரங்களை  மேற்கொண்டு வரும் நிலையில், ஏராளமான சாமியார்கள் அவருக்கு எதிராக களமிறங்கி உள்ளனர். அவர்களும், ‘நர்மதாவின் நிஜமான பக்தர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் தான் என்றும்,  நர்மதாவுக்கு பூஜை செய்வோமே தவிர, ஜெயில் யாத்திரை நடத்துவது கிடையாது  என்று தெரிவித்து உள்ளனர்.

போபாலில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று காங்கிரஸ் வசம் உள்ள நிலையில், போபால் லோக் சபா தொகுதியில் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பாஜக செய்வதறியாமல் முழிபிதுங்கி உள்ளது.