டுப்பி

நாடெங்கும் ஒரே சிவில் சட்டம் வரும் வரை இந்துக்கள் நான்கு குழந்தகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சாமியார் கூறி உள்ளார்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் தற்போது இந்து அமைப்புகளின் மாநாடு நடைபெறுகிறது.  இதில் விஸ்வ இந்து பரிஷத், ஆர் எஸ் எஸ் உட்பட பல அமைப்புக்களும்,  பல மடாதிபதிகளும்,  சன்யாசிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.    ஹரித்வார் பாரத் மாத மந்திரின் மடாதிபதி கோவிந்த்தேவி கிரிஜி மகராஜ் உரையாற்றியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அவர் தனது உரையில், “நமது நாட்டில் தற்போது பல இடங்களின் இந்து மக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.    இந்த மக்கள் தொகைக்குறைவால் நாம் எதிரிகளிடம் பல பகுதிகளை இழந்தது இனிமேலும் தொடரக்கூடாது.    நாடெங்கும் ஒரே சிவில் சட்டம் அனுமதிக்கப்பட்டு அனைத்து மதத்தினருக்கும் ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகல் என சட்டம் இயற்ற வேண்டும்.

இந்துக்களுக்கு மட்டுமே இப்போது இந்த சட்டம் உள்ளது.   அதனால் இந்துக்கள் அனைவரும் குறைந்த பட்சம் நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும்.   இனியும் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதை அனுமதிக்கக் கூடாது.     பசுப் பாதுகாவலர்கள் அமைதியானவர்கள் என்பதால் பல குற்றணிப் பின்னனி உள்ள கிரிமினல்கள் தங்கள் சொந்தப் பிரச்னைக்கு இவர்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் செய்து வருகின்றனர்” என கூறி உள்ளார்.    மடாதிபதியின் இந்த உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.