உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் புனித நீராடலுடன் கும்பமேளா தொடங்கியது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கன் பக்தர்களும், சாதுக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித் நீராடி பரவசமைந்தனர்.

kumpamela

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழா உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்(அலகாபாத்) நகரில் விமர்சையாக தொடங்கியது. இந்த கும்பமேளா விழாவில் பங்கேற்பதற்காக் நாட்டின் பலப்பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் வருவது வழக்கம். அதன்படி இன்று பிரயாக்ராஜ் நகரில் பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.

மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த கும்பமேளாவில் 12 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் அடிப்படை வசதிகளை மாநில அரசு கண்காணித்து வருகிறது.

kumbh660

கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு கங்கையாற்றங்கரையில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக ந்கரம் உருவாக்கப்பட்டது. சுமார் 32ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக நகரில் மருத்துவமனைகள், காவல்நிலையங்கள், கடைத்தெருக்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளாவிற்கு மாநில அரசு ரூ.4200 கோடியை செலவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சாதுக்கள் இந்த கும்பமேளாவில் பங்கேற்பதால் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த் ஏற்பாடுகளை தொடர்ந்து கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஜீவநதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ பகுதியில் பக்தர்கள் அனைவரும் இன்று புனித நீராடி மகிழ்ந்தனர்.