க்னோ

ரும் 2019ல் நடக்கிவிருக்கும் அர்த் கும்ப மேளா உற்சவத்தை ஒட்டி அலகாபத் நகரின் பெயர பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என இந்து மடாதிபதிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள இந்துக்களின் புனித நகரங்களில் அலகாபாத்தும் ஒன்றாகும்.  இங்கு பிரயாகை என்னும் இடத்தில் மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன.  கங்கை , யமுனை ஆகிய நதிகளுடன், கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதியும் சங்கமம் ஆகும் இடமான திரிவேணி சங்கமம் உள்ளது.  இந்த நகரில் அர்த் கும்ப மேளா என்னும் விழா வரும் 2019ல் நடைபெற உள்ளது.  இந்த விழா குறித்து அகில பாரத ஆகாரா பரிஷத் என்னும் இந்து மடங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு ஒரு மடாதிபதிகள் சந்திப்பை நிகழ்த்தியது.

தற்போது 14 போலி சாமியார்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் முடிவில் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி கூறியதாவது :

”அர்த் கும்ப மேளாவுக்கு கோடிக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அத்துடன் அலகாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் யோகி அமர்நாத்துக்கு கோரிக்கை செய்துள்ளோம்.  அவரும் எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லி உள்ளார்.  அத்துடன் கங்கை நதியில் அனைவரும் நீராட வசதிகளும், குடி நீர் வசதிகளும் செய்து தர நாங்கள் கோரிக்கை வைத்தற்கு நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி அளித்துள்ளார். விழா நடக்கும் இடம் பற்றி அரசு இனி முடிவு அறிவிக்கும்: என தெரிவித்துள்ளார்.

அர்த் கும்ப மேளா என்பது ஆறு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.  இந்த நாளில் கோடிக்கணக்கான பக்தர்கள் அரித்வார் மற்றும் அலகாபாத் நகரங்களில் உள்ள கங்கை நதியில் புண்ணிய நீராடுவது வழக்கம்.