இஸ்லாமியர்களுக்கு உதவிய வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகி ராஜினாமா செய்ய வேண்டும்… பஜ்ரங்தளம் மிரட்டல்

ஸ்ரீநகர்:

மலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு  உதவியதற்காக பிரபல  வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகி,  உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அங்குள்ள பஜ்ரங்தளம் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியாவின் இந்து மத புனித கோயில்களில் ஒன்று வைஷ்ணவ தேவி கோவில். இது காஷ்மீர் மாநிலத்தில் உள்ள  திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.  இக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 8 மில்லியன் பக்தர்கள் வருடந்தோறும் வருகை தருகின்றனர்.

இந்த கோவிலின் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த 500 தனிமைப்படுத்தப்பட்ட  இஸ்லாமியர்களுக்கு  இப்தார் உணவை வழங்கியது.  இது சமுக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால்,  இந்த செயல் இந்து அமைப்பான பஞ்ரங்கதள் அமைப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

வைஷ்ணவி கோவில் நிர்வாகி செய்த செயல் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது என்று கூறி,  வைஷ்ணோ தேவி ஆலய வாரிய தலைமை நிர்வாக அதிகாரி அடுத்த 72 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு பஜ்ரங் தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூறிய அந்த மாநில தலைவர், வைஷ்ணவி கோவிர் நிர்வாகி ரமேஷ் குமார்  “இப்தார் ஏற்பாடு செய்ததன் மூலம்,  இந்து சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். 72 மணி நேரத்திற்குள், இதற்காக  அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” , “இது இந்து  மக்களின் பணம் மற்றும் இந்து சமூகத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.