பாகிஸ்தானில் இந்து பெண் படுகொலை

--

லாகூர்:

பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகானத்தில் சானியா குமாரி என்ற இந்து பெண் நசிராபாத் மாவட்டம் பாபா கோட் பகுதியில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல் ரவுடி கூட்டமாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட குமாரியின் சகோதரர் ஜலோ ராம் கூறுகையில்,‘‘ காரணமே இல்லாமல் எனது சகோதரி அந்த பகுதியை சேர்ந்த ஆதிக்க மக்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.