பாகிஸ்தான்: செனட் உறுப்பினர் பதவிக்கு இந்து பெண் போட்டி

கராச்சி:

சிந்து மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஒரு இந்து பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் நகர்பர்கர் மாவட்ட செனட் உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தார் பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமாரி (வயது 38) என்ற இந்து பெண் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதில் கிருஷ்ணகுமாரி வெற்றி பெற்றால் இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு நாட்டில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு பெண் செனட் உறுப்பினராவது இதுவே முதல்முறையாகும். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய ரூப்ளோ கோஹ்லியின் குடும்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed